வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! சுவரில் இரத்தக்கறை
tamil news:
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் தனியாக இருந்த குறித்தநபர், மனைவி பாடசாலையில் பணியாற்றிச் சென்ற நிலையில்,
மதியம் 1.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய மனைவி கதவை தட்டியபோதும் எந்த பதிலும் இல்லை.
அயலவர்களின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்தபோது,
அவர் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பண்டாரிக்குளம் காவல்துறையினர் தகவல் வழங்கிய போதும்,
அவர்கள் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிற்பகல் 4.30 மணியளவில் வவுனியா காவற்துறையினர்,
பின்னர் மாலை 5 மணிக்கு பண்டாரிக்குளம் பொலிசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின் அடிப்படையில்,
வீட்டில் சுவருக்கு வண்ணம் பூசும்போது கட்டிலிலிருந்து தவறி விழுந்திருக்கும் சாத்தியம் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 60 வயது சி. மகேந்திரராஜா என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளை வவுனியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.