வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தேர்தலுக்கு முன்னதாக தவிசாளர், முதல்வர் பெயர்கள் அறிவிக்கப்படாது – கூறுகிறார் சுமந்திரன்!


tamil news: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவானது,

உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர் அல்லது தவிசாளர் பதவிக்கான பெயர்களை தேர்தலுக்கு முன்னர் அறிவிக்காது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் முடிந்தபிறகே அந்த முடிவு எடுக்கப்படும் எனவும்,

இந்த முறை அதிகளவில் புதியவர்கள் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்படக்கூடும் எனவும் அவர் கூறினார்.


எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை செலுத்திய பின்னர்,

ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்டு,

வேட்புமனு படிவங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.


“யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைக்கும் என்ற உறுதியுடன் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.


ஆனால், இந்தமுறை முதல்வர் அல்லது தவிசாளர் யார் என தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்படாது.


அது தேர்தலுக்கு பின்னர் முடிவெடுக்கப்படும்.


மேலும், புதியவர்களுக்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்படும்”

என்று சுமந்திரன் தெரிவித்தார்.


அத்துடன், கட்சியில் அதிகளவிலான வேட்பாளர்கள் இருப்பதால், அவர்களை தேர்வு செய்வதில் சில சந்தேகங்கள் உருவாகியிருக்கலாம்.


ஆனால், வழக்கமாக இருக்கும் இந்த பிரச்சனைக்காக கட்சி யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதற்கான தீர்மானத்தை ஒருங்கிணைந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.