வவுனியாவில் 15 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
tamil news:
இன்றையதினம்(03.04.2025) வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது சுமார் 15 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம்(03.04.2025) இடம்பெற்ற விசாரணையானது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, வவுனியாவின் கணேசபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் சுமார் 15 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் தொடர்புடையதாக வவுனியா, கணேசபுரம் மற்றும் கூமாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்ட மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நபர்களும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் விசாரணைக்காக நெளுக்குளம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்குப் பிறகு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.