மோடி வருகையின் பின் 22 இந்தியர்கள் கைது?
tamil news:
ராஜகிரியாவில் அமைந்துள்ள ஒரு தனியார் அலுவலகத்தை சுற்றிவளைத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகளை நேற்றையதினம்(10.04.2025) கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் காலாவதியான விசாக்களுடன் இலங்கையில் தங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 17 பேர் சுற்றுலா விசா அடிப்படையில் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
4 பேர் தங்கும் விசா மற்றும் ஒருவர் வணிக விசா மூலம் இலங்கையில் வந்துள்ளனர்.
கடந்த நாட்களில் சந்தேகத்திற்குரிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கைது இந்தியப்பிரதமர் வந்துசென்றுள்ள நிலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.