யாழில் 23 வயது இளைஞனின் மரணத்தில் சந்தேகம்!!! நடந்தது என்ன?
tamil news:
யாழ்ப்பாணம் கொடிகாமம்-வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயது இளைஞரின் மரணம் தொடர்பில் புதிதாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்தச் சம்பவம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
அதாவது
மரணம் நிகழ்ந்த நாளன்று சிலுசன் தனது நண்பருடன் சென்றதாகவும்,
பின்னர் மற்றொரு நண்பரின் அழைப்பின் பேரில் கோவில் அருகேயுள்ள ஒரு கேணிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்த இடத்தில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரும் இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி பொதுமக்கள் குளிக்காத அந்தக் கேணியில் தாமரைக்கொடி சிக்கி மரணம் ஏற்பட்டதாக கூறப்பட்டதையும் அவர்கள் பொய் என கூறுகின்றனர்.
ஏனெனில் சம்பவ இடத்தில் தாமரைக்கொடி இல்லை என கூறும் அவர்கள்,
சம்பவம் நடைபெற்ற பகுதியில் பரிசோதிக்க இருவரை அந்தக் குளத்தில் இறக்கி நிலைமையை ஆய்வுசெய்தபோது எந்தவிதமான ஆபத்தும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
மேலும் சிலுசனின் உடை மற்றும் செருப்பு கேணியின் கரையில் காணப்பட்டுள்ளன.
அத்துடன் அருகிலிருந்த மூன்று மதுபான கேன்கள் சந்தேகத்திற்குள்ளாகின்றன.
இந்நிலையில் மரண அறிக்கையில் சிலுசன் மதுபானம் அருந்தியதற்கான ஆதாரம் இல்லையெனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு, நீர் சுவாசக்குழாய்களில் புகுந்ததாலேயே மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அவரது தோளில் காயம் காணப்படுவது மரணம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்புகின்றது.
அதுமட்டுமின்றி அவரின் உடல் கிடந்த இடத்தில் நீளமான ஒரு கட்டை காணப்பட்டுள்ளது.
அதனைப் பயன்படுத்தி காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்றநிலையில் அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த கேள்விகள் எழுகின்றன.
மேலுமா அவரை வைத்தியசாலையில் சேர்த்தவர்கள் பொய்யான பெயர்களை பயன்படுத்தியதுடன் அவரது கைபேசியில் இருந்த தகவல்களும் நீக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கைபேசி பெற முற்பட்டபோது ஒருவரால் அது பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
தொடர்ந்து மரணம் தொடர்பான விசாரணைகள் சில இடைவெளியுடன் நடைபெறுவதாகவும்,
சில அதிகாரிகள் சந்தேகமானமுறையில் நடந்துகொள்வதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் மரணத்தின்போது வைத்தியசாலையில் 'சிவரூபன்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டாலும்,
அந்தநபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் குறித்து உறுதியான தகவல்கள் இருப்பதாகவும்,
சிலர் இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தக் காணொளி தற்போது யாரிடம் உள்ளதென கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.