வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கை வந்த ஆசிரியரிடம் ரூ.240 மில்லியன் பெறுமதியான ஹொக்கேனுடன் கைது!


tamil news:

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒரு வெளிநாட்டு பயணி சந்தேகத்துக்கிடமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரேசிலிலிருந்து இலங்கைக்கு வந்த 59 வயதான ஒரு ஆணிடம் இருந்து சுமார் ரூ.240 மில்லியன் மதிப்புள்ள 4.855 கிலோகிராம் ஹொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலும் இவர் ஒரு ஆசிரியர் என தெரியவந்துள்ளது.


ஹொக்கேனானது நன்றாக மூடப்பட்ட கறுப்பு காகிதத்தில் அடைக்கப்பட்டு,

அவரது அட்டைப்பெட்டியில் ஒட்டப்பட்ட நிலையில் அவரது பயணப்பொருட்களுக்குள் மறைக்கப்பட்டிருந்தது.


இந்த பயணி பிரேசிலில் இருந்து கட்டாருக்கு சென்று பின்னர் டோஹா வழியாக இன்றையதினம்(20.04.2025) அதிகாலை 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


சுங்கத்துறையின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் அவரை விசாரித்தநிலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் அவரையும் மேலதிக விசாரணைகளுக்காக விமானநிலையப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.