முல்லை. வெதுப்பகம் மூடல் – 25 கிலோ பொருட்கள் அழிப்பு
tamil news:
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பகுதியில் இயங்கியிருந்த ஒரு வெதுப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனையின் போது சாப்பிடத் தகுதியற்ற 25 கிலோகிராமுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இன்றையதினம்(17.04.2025) இடம்பெற்ற இந்த சோதனையை ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், பொதுசுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்திருந்தனர்.
சோதனையில் சுகாதார நிலைமைக்கேற்ப இல்லாத பல உற்பத்திப்பொருட்கள் கண்டறியப்பட்டன.
சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிலையில் செயற்பட்ட இந்த வெதுப்பகம், குறைகளை சரிசெய்யும் வரை இடைநிறுத்தப்பட்டதுடன்,
10 நாட்களுக்குள் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.