மின்னல் தாக்கும் அபாயம் – 3 மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை!
tamil news:
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்றையதினம்(07.04.2025) இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது என்று வானியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றையதினம்(07.04.2025) பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் படி,
இது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைநேரத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும்,
வெளிப்புறத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற பகுதிகளைத் தவிர்க்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க சம்பந்தப்பட்ட நேரங்களில் கம்பி தொலைபேசிகள் அல்லது மின்சார சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.