யானை தாக்குதலில் 31 வயதுடைய தந்தை உயிரிழப்பு – புத்தாண்டில் சோகம்
tamil news:
மட்டக்களப்பு – வெல்லாவெளி:
புத்தாண்டு கொண்டாட்டம் சோகமாக முடிந்தது.
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் 31 வயதுடைய இளந்தந்தை ஒருவர் உயிரிழந்த வருத்தகரமான நிகழ்வு ஒன்று இடம்பற்றுள்ளது.
வெல்லாவெளி காவற்துறைப்பிரிவிற்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் இன்றையதினம்(14.04.2025) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் இராசதுரை சசிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது வீட்டுவாசலில் யானை தாக்கியதாக கூறப்படுகின்றது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவரை உடனடியாக உறவினர்கள் களுவாஞ்சிகுடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சசிகரனின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று இத்தகைய துயரச்சம்பவம் நிகழ்ந்ததால், அந்த கிராமத்தில் சோகமான நிலை ஏற்படுத்தியுள்ளது.