வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அடுத்த 36 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கும் பலத்த காற்றுக்கும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்


weather news:

அடுத்த 36 மணிநேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடியுடனான மழை அவ்வப்போது பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.


மேலும் அநுராதபுரம், மாத்தளை, மன்னார், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழை கொட்டும் சாத்தியம் உள்ளது.


ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மாலை நேரம் அல்லது இரவில் இடைக்கிடை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது.


மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள்,

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள்,

திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் நிகழ்வுகள் இடம்பெறலாம்.


இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மின்னல் அபாயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவும்,

பொதுமக்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.