AI உருவாக்கிய உலகின் முதல் குழந்தை!!!
tamil news:
மருத்துவ துறையில் எழுச்சி ஏற்படுத்தும் வகையில் செயற்கைநுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இது உலகிலேயே முதல்முறை என்ற அடையாளத்துடன் பெரும் சாதனையாக கருதப்படுகின்றது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய புதிய AI கருவியானது,
மருத்துவர்களின் வழிமுறைகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நோயாளியின் தகவல்களை பதிவுசெய்தல், சிகிச்சை திட்டங்களை அமைத்தல் போன்ற பணிகளை தானாக மேற்கொள்வதற்கான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவ உதவியாளர்கள் அல்லது தாதியர்களின் பங்கு குறைவடையும் நிலை உருவாகும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே தொழில்நுட்பத்தின் மூலம், இனப்பெருக்க சிகிச்சையான IVF முறையில் எந்தவொரு மனித செயற்பாடுகளும் இல்லாமல் தானியங்கியாக ஒரு குழந்தை உருவாகும் செயல்முறை முதன்முறையாக வெற்றியடைந்துள்ளது.
இந்த புதிய முறையில் Intracytoplasmic Sperm Injection(ICSI) எனும் செயல் முழுமையாக AI உதவியுடன் தானியங்கி முறையில் 23 படிகள் கடந்து நிறைவடைந்தது.
மெக்ஸிகோவில் உள்ள Hope IVF மருத்துவமனையில், 40 வயதான ஒரு பெண்ணின் முட்டைகள் மூலம் இந்த செய்முறை மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து முட்டைகள் செயற்கையாக கருக்கூட்டப்பட்டதில் நான்கு வெற்றிகரமாக கருக்கூடியதாக கூறப்பட்டுள்ளது.
அதில் ஒன்று வளர்ச்சியடைந்து ஒரு ஆரோக்கிய ஆண் குழந்தையாக பிறந்துள்ளது.
இந்த பெரும் சாதனையை அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோவின் குவாடலஜாரா நகரத்தில் உள்ள Conceivable Life Sciences நிறுவனத்தின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து நிகழ்த்தியுள்ளனர்.