வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மோடியின் இலங்கை வருகை: விலங்கியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!


tamil news:

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை வருகைக்கு முன்பாக,

விலங்கியல் ஆர்வலர்கள் இன்றையதினம்(03.04.2025) கொழும்பில் எதிர்ப்புப்பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


நாளையதினம்(04.04.2025) மோடி வருகை தரவுள்ள நிலையில் அரச அதிகாரிகள் கொழும்பு மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் தெருநாய்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கையில் தெருநாய்கள் சமூக நாய்களாக கருதப்படுகின்றன,


அவற்றுக்கு உரிமையாளர்கள் இல்லாவிட்டாலும் பொதுமக்களால் பராமரிக்கப்படுகின்றன.



இந்தநிலையில் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மனு ஒன்றை வழங்கிய பிறகு ஜனாதிபதி அலுவலகம் முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


"எங்கள் சமூக நாய்களை கொடூரமாக அகற்றுவதை நிறுத்துங்கள்"

போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



மேலும்

"தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,

அவை உள்ளூர் சமூகத்தினால் பராமரிக்கப்படுகின்றன."

என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


அதேசமயம்,

"விலங்குகளுக்கெதிரான கொடுமைக்கு பெயர்பெற்ற நாடாக இலங்கை இருக்கும்போது எவ்வாறு சுற்றுலாவை ஊக்குவிக்க முடியும்?"

என்ற கருத்தை வெளிப்படுத்தும் மற்றொரு பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இந்தக் கடுமையான நடவடிக்கைகளை தடுக்க இந்திய அரசு தலையிடவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.