கிளிநொச்சியில் சிறுவர்களிடம் தவறான நடத்தை: விளையாட்டு பயிற்றுநர் கைது
tamil news:
கிளிநொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு பயிற்சி வழங்கிய பயிற்றுநர் பல சிறுவர்களிடம் தவறான நடத்தை காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பள்ளியில் கல்விபெறும் 16 சிறுவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற அனுபவங்களுக்கு உள்ளானதாக அதிபரும் பெற்றோர்களும் இணைந்து கிளிநொச்சி காவற்துறையில் புகார் செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த காவற்துறையினர் தலைமறைவாக இருந்த சந்தேகநபரை கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
தற்போது அவர் காவற்துறையில் காவலில் வைத்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணை முடிவில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.