கொழும்பில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு காயம்!!!
tamil news:
கொழும்பு கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்றையதினம்(11.04.2025) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காவற்துறையினரின் தகவல்படி,
சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை காவற்துறையினர் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.
சோதனையின்போது அந்த நபர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தநபர் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.