திருகோணமலை பேருந்திலிருந்து வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!!!
tamil news:
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர், பயணத்தின்போதே விபத்துக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக ஹபரண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம்(11.04.2025) பிற்பகல் ஹபரண பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
போதிவெல, ரிக்கில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் பேருந்தின் முன்பகுதியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக ஹபரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஹபரண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.