நள்ளிரவில் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம் – சந்தேகநபர் தப்பித்ததால் பதற்றம்!!!
tamil news:
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றையதினம்(12.04.2025) நள்ளிரவு சுமார் 12.35 மணியளவில் சந்தேகத்துக்கிடமான ஒரு வாகனத்தை இலக்காகக்கொண்டு காவற்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
அதாவது,
மட்டக்குளி பகுதியிலிருந்து கடத்தல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,
குறித்த வாகனத்தைத் தடுப்பதற்கான முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் சாரதி காவற்துறையின் உத்தரவை புறக்கணித்து வாகனத்தை நிறுத்தாமல் தப்ப முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் வைத்து காவற்துறையினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பின் குறித்த சந்தேகநபர் வாகனத்தை அங்கு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
வாகனம் தற்போது காவற்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை கைதுசெய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.