"ஏக்ராஜ்யம்" தமிழர்களுக்கு எதிரானது இல்லையாம் – கூறுகிறார் சுமந்திரன்!!!
tamil news:
"தமிழ்மக்களுக்கு 'ஏக்ராஜ்யம்' என்ற சொல் தவறாக புரிந்துகொள்ளப்படக்கூடியதாக இருக்கலாம்.
ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தம் 'ஒரே நாடு' என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்."
இவ்வாறு தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
மேலும்
" 'ஏக்ராஜ்ய' என்ற கருத்து தமிழ்மக்களுக்கு எதிராக முன்வைக்கப்படுவதாக சிலர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும்,
குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலர் போன்றவர்களுக்கு இதன் பொருள் தெளிவாகவே தெரியும்."
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும்
"தமிழரசு கட்சி மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாக அரசாங்கம் பரப்பும் கருத்தும் தவறானது.
யாழ் மக்களின் பெரும்பான்மையும் இன்னும் தமிழ்த்தேசிய கட்சிகளையே ஆதரிக்கின்றனர்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம்.
தங்களது உரிமைகளை பாதுகாக்க இதுவே சிறந்த வழி"
என அவர் தெரிவித்தார்.