வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவனை தாக்கிய வழக்கில் இருவர் விளக்கமறியலில்!


tamil news:

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் புதுமுக மாணவனொருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் தாக்குதல் மற்றும் சித்திரவதை சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட மாணவன், கடந்த 27ம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவ நிலையத்திற்கு நடந்து சென்றபோது சில சிரேஷ்ட மாணவர்கள் அவரை வழிமறித்து, விரிவுரைக்கு செல்லாமல் தடுத்ததாக கூறப்படுகின்றது.


பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு, குறித்த மாணவனுடன் மேலும் சில புதுமுக மாணவர்களும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


தாக்குதல் நடத்தியவர்களால் தலைக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


இந்த தாக்குதலில் நாத்தாண்டியத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் கோப்பாய் காவற்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணையில் ஈடுபட்ட காவற்துறையினர் இரு சிரேஷ்ட மாணவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


இதனை அடுத்து, நீதிமன்றம் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.


மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மாணவர்களை அடையாளங்காணும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தலைமறைவாக உள்ளவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.