மோடியின் திட்டத்தை நிராகரித்த அனுர!
tamil news:
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி சில முக்கிய யோசனைகளை முன்வைத்ததாகத் தெரியவருகின்றது.
ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்தியாவுடன் நில இணைப்புத்திட்டத்தை இலங்கை பரிசீலிக்க முடியாது எனவும்,
அதற்கான ஏற்பாடுகள் தற்போது இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனை முதலில் 2002-2004 காலப்பகுதியில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நேரத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் 2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க தனது இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த நில இணைப்புத் திட்டம் மீண்டும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2024 டிசம்பரில் புதுடில்லிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
"தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லை."
என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே இந்திய பிரதமர் சமீபத்தில் இலங்கைக்கு வந்தபோதும் இந்த விடயம் முக்கியமாக பேச்சுவார்த்தைகளில் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில் மோடி கடந்த பயணத்தின்போது இருதரப்பு பேச்சுகளின்போது இந்த நில இணைப்பை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டதாகவும்,
பயணம் முடிந்து இந்தியா திரும்பும்போது இலங்கை-இந்தியா இடையிலான ராமர் சேது பாலத்தை இந்திய விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் அவர் பார்வையிட்டதாகவும் கூறப்படுகின்றது.