டிரம்ப் அணியில் குழப்பம்: எலோன் மஸ்க் மற்றும் நவரோவுக்கு இடையே வாக்குவாதம்!
tamil news:
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசனைக்குழுவில் பெரும் கருத்து முரண்பாடு உருவாகியுள்ளது.
தொழிலதிபர் எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் பீட்டர் நவரோ இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது சர்வதேச ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
அதாவது, நவரோ மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தை குறைத்து விமர்சித்த நிலையில் மஸ்க் பதிலடியாக நவரோவைக் கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ட்ரம்ப் அணிக்குள் ஏற்கனவே இருந்த பிளவுகளை மேலும் தீவிரமாக்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதனுடன், ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்த வரிக் கொள்கையும் அமெரிக்க மக்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டிருப்பது, சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோரை பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே ட்ரம்பின் கொள்கையை ஆதரிக்கும் ஒரு பிரிவும், எதிர்க்கும் ஒரு பிரிவும் உருவாகி சாலைகளில் போராட்டங்களாகும் நிலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.