வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – கடல் கொந்தளிக்க வாய்ப்பு!
weather news:
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் தற்போது நிலவும் வானிலை மாற்றங்களால் கடலோர மக்களும், மீனவர்களும் அதிகமான அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
குறித்த பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கமாக, அடுத்த 24 மணி நேரங்களில் மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் இது மெதுவாக பலவீனமடையலாம் என வளிமண்டலவியல் துறை தெரிவித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில், கடல்பரப்புகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை வேகமுள்ள பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால், கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த கடல் பகுதிகளில் பயணிக்க உள்ள மீன்பிடி படகுகளும், மற்ற கடற்பயணங்களும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மேலும் கடல்சார் சமூகங்கள் வளிமண்டலவியல் துறையின் எதிர்கால அறிவிப்புகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.