உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இனப்படுகொலையாளியின் நிதியுதவியா? புதிய தகவல்கள் வெளிவருகின்றன
tamil news:
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நினைவுநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
இத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்களது உயிர்கள் பறிபோயின.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் மீது உடனடியாக குற்றச்சாட்டு சுமக்கப்பட்டது.
எனினும் சமீபத்தில் வெளியான உளவுத்துறை தகவல்கள், வங்கி பணப்பதிவுகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் சில இந்த தாக்குதல்கள் முன்னே திட்டமிடப்பட்ட ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
அதிலும் முன்னாள் பாதுகாப்புச்செயலாளரான கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக இருந்தபோது தாக்குதல் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியுதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கான ஆதாரமாக,
அவரது நெருக்கமான நபராகக் கருதப்படும் ஒரு முக்கிய தொழிலதிபர்(இவர் முன்னதாக கொழும்பிலுள்ள உயர்தர விடுதியில் இயக்குநராகவும் இருந்தவர்) 65 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தாக்குதல் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி பயணச்செலவுகள், தங்குமிடம் மற்றும் வெடிபொருட்கள் வாங்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும் இராணுவ புலனாய்வுத்துறையின் ஒரு இரகசிய பிரிவு தாக்குதலாளர்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்குவதில் ஈடுபட்டதாகவும்,
அவற்றை கண்காணிக்க முடியாதநிலையில் நகர்த்த உதவியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தகவல்கள் உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில், இலங்கையின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பமும், இனப்படுகொலை புரிந்தவர்களில் ஒருவருக்கு எதிராக தகுதியான சட்டநடவடிக்கைகள் தேவைப்படலாம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.