வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை திணைக்களம் எச்சரிக்கை!


weather update:

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்றையதினம்(15.04.2025) பிற்பகல் அல்லது இரவின்போது மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மழை பெய்யக்கூடிய முக்கிய மாகாணங்களாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


குறிப்பாக மேல் மாகாணம், காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மட்டக்களப்பில் காலை வேளையிலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.


மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் சில இடங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.


இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


மேலும், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில பகுதிகளில் காலையில் பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.