நாவற்குழியில் விபச்சாரம் தொடர்பாக நால்வர் கைது
tamil news:
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் உள்ள வீட்டொன்றில் விபச்சாரம் நடைபெற்று வந்ததாக கிடைத்த தகவலின்பேரில், குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸார் இன்றையதினம்(09.04.2025) குறித்த இடத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான அந்த வீட்டின் 68 வயது உரிமையாளர் உட்பட அளவெட்டி, குருநகர் மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40, 42 மற்றும் 53 வயதுடைய மூன்று பெண்கள் கைதாகியுள்ளனர்.
இவர்கள் நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் செயல்பட்டு வந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைதான நால்வரையும் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்