இஸ்ரேலிய விமான தாக்குதலில் காசா பள்ளிகள் அழிவு – பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!
tamil news:
காசா நகரில் அமைந்துள்ள பள்ளிகள் மீதான இஸ்ரேலிய விமானப்படையின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தாக்குதலில் சிக்கியவர்களை மீட்க, சிவில் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள துல்கரேமின் புறநகரான அக்தாபாவில் இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அங்குள்ள வீடுகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
நீர் மற்றும் கழிவுநீர் வசதிகளும் சேதமடைந்துள்ளன.
துல்கரேமில் தொடர்ந்து நிலவும் முற்றுகை காரணமாக பல்வேறு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையே லெபனான், ஏமன், காசா மற்றும் சிரியா போன்ற பிராந்தியங்களில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருப்பதை "அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு" என லெபனான் அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
பிராந்திய மக்கள் மீதான இஸ்ரேலிய நடவடிக்கைகள் அவர்களின் நிலையான வாழ்வியலை அழிக்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் அடுத்தகட்ட உத்திகள் குறித்து வருங்காலத்தில் என்ன நிகழும் என்பது அவதானிக்க வேண்டிய விஷயமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.