நிலாவெளியில் வீட்டுக்கு தீவைத்த சம்பவம்!!!
tamil news:
திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள இக்பால் நகர் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இன்றையதினம்(14.04.2025) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியினரை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சம்பவநேரத்தில் வீட்டு உரிமையாளர் முகைதீன் பிச்சை சேகாலம் வீட்டில் இல்லாதிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் தீவைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தீயில் வீடு முற்றாக எரிந்து நாசமாகி விட்டதுடன் சமையலறைப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல கணிப்பிடமுடியாத பொருட்களும் சேதமடைந்துள்ளன.
தற்போது சம்பவத்திற்கான காரணம் மற்றும் தீவைத்த நபர் தொடர்பான தகவல்களை கண்டறிய நிலாவெளி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.