பண்டிகைக் காலங்கள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!!!
tamil news:
புத்தாண்டு மற்றும் பிற பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அவற்றின் விளைவுகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை குறித்து சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
திடீர் விபத்துகள் அதிகம் பதிவாகும் இந்தக் காலப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன என்று தொற்றாநோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்ட வாரங்களில் சுமார் 28,000 முதல் 30,000 பேர் வரையில் விபத்துகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என அந்தப் பிரிவின் நிபுணர் டொக்டர் சமித் சிறிதுங்க தெரிவித்தார்.
மேலும் இந்தக் காலப்பகுதியில் 75 முதல் 100 பேர் வரை உயிரிழப்பது வழக்கமாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் மற்றும் எச்சரிக்கையுடன் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.