வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பிள்ளையான் - உதய கம்மன்பில சந்திப்பு: நாட்டுக்கு புதிய அச்சுறுத்தல்?


tamil news:

"பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவராக இருக்கும் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்(சி. சந்திரகாந்தன்) இடையேயான அண்மைச் சந்திப்பு நாட்டில் புதிய பிரச்சினைகளுக்கு வித்திடக்கூடிய ஒன்று."

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு எச்சரித்துள்ளார்.


நேற்றையதினம்(17.04.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த சந்திப்பின் பின்னணி ஒரு பெரிய திட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம்.


உதய கம்மன்பில தற்போது பிள்ளையான் தொடர்பான வழக்கில் அவரது சட்டத்தரணியாக செயற்பட்டு வருகின்றார்.


இதுவே இவர்கள் இடையிலான கூட்டணிக்கு ஒரு தொடக்கக்கொடி”

என கூறினார்.


மேலும் அவர் கூறுகையில்,

"உதய கம்மன்பில இனவாத சிந்தனைகளை முன்னிறுத்தி கடந்த காலத்தில் செயல்பட்டவர்களில் ஒருவர்.


இப்போது அவர் பிள்ளையான் தொடர்பான சட்டநடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் இணைந்து செயற்படுவது,

நாங்கள் சந்தேகிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம்.


இது நாட்டில் கவலையை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கும்."

என்றார்.


இவர்கள் இருவரும் தொடர்புடைய விவரங்கள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது என்றும்,

சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் விசாரணைகள் என்பது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் அவர் விளக்கினார்.


"கடந்த காலங்களில் இந்த இருவரும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.


ஆனால் அவை நிறைவேறவில்லை.


தற்போது ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது என்பது இயல்பு செயல் மட்டுமே."

என அவர் கூறினார்.