காரைத்தீவில் மக்கள் தொகை குறைந்துள்ளது!!! ஹரிணி அமரசூரிய கவலை
tamil news:
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காரைத்தீவு பகுதியில் கடந்த சில தசாப்தங்களில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளதாக ஹரிணி அமரசூரிய அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(11.04.2025) காரைநகரில் நடைபெற்ற தேர்தல்பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
கடந்த 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 80,000 பேர் வசித்த இந்தப் பகுதியில், தற்போது சுமார் 10,500 பேர் மட்டுமே வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
“இந்நகரம் பற்றிய தகவல்களை மேடையில் இருக்கும்போதே அறிந்தேன்.
கடந்த காலங்களில் இவ்வூரில் பலர் வாழ்ந்திருந்தாலும் இப்போது பெரும்பாலோர் வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களில் பலர் கல்வி, தொழில் வாய்ப்புகளால் முன்னேறியிருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சியளிக்கின்றது”
என்று அவர் கூறினார்.
இதனுடன், இப்பகுதியை விட்டு வெளியேற முடியாதவர்களின் நிலைமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இவர்கள் நமது நாட்டின் பூரண குடிமக்களே அல்லவா?
அவர்களுக்கும் சம உரிமைகள், முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டாமா?”
என்றார்.
இந்த நிலைமையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், காரைத்தீவின் மீளுயிர்வை நோக்கி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தீர்வுகள் தேவை எனவும் வலியுறுத்தினார்.