வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வாக்களித்த அரசு ஊழியரையே தாக்கிய அனுரவின் காவற்துறை – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை


tamil news:

கிளிநொச்சியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றும் சாந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு அரச ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு காவற்துறையினரை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.


குறித்த இளைஞர் கிளிநொச்சி காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவற்துறையினர் தன்னை தவறான காரணமின்றி தாக்கிவிட்டு கைவிலங்கிட்டதாக முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஏப்ரல் 21ம் திகதி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில்,

சம்பந்தப்பட்ட காவற்துறை அதிகாரிகள், கிளிநொச்சி காவற்துறை நிலையத் தலைவர் மற்றும் மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஆகியோர் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரச உத்தியோகத்தர்களின் பெருமளவு வாக்குகள் அனுர தரப்பிற்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.