தலதா மாளிகையில் தந்ததாது தரிசனத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு!
tamil news:
புனித தந்ததாது தரிசன நிகழ்வை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் காவற்துறையினருடன் இணைந்து இராணுவத்தினரும் பாதுகாப்புப்பணியில் இணைக்கப்பட உள்ளனர்.
இம்முறை தந்ததாது தரிசனம் எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் போதான நிவாரணம் மற்றும் சீரான அமைதியை உறுதிசெய்யும் நோக்கில் பாதுகாப்புப்படைகள் முழுமையாக செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் வழிகாட்டும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இராணுவப் பிரிவுகள் கடமையாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தளபதியின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.