மகனின் கொடூரத் தாக்குதலில் தாய் உயிரிழப்பு!
tamil news:
மட்டக்களப்பு, வாழைச்சேனை காவற்துறைப்பிரிவில் உள்ள நாவலடி - கேணி நகர் பகுதியில் இன்றையதினம்(06.04.2025) காலை இடம்பெற்ற துயரமான சம்பவத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகிய 65 வயது பெண்மணி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துக்கு காரணமாக, மனநலம் பாதிக்கப்பட்ட அவரது 46 வயது மகன் இச்செயலில் ஈடுபட்டதாக காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாயுடன் ஒரே வீட்டில் வசித்துவந்த மகன் எதுவித காரணமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.