இலங்கையில் புதிய கட்டணமுறை அமுலில்!
tamil news:
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, கட்டணங்களை அட்டைகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் செலுத்தும் புதிய முறையை அரசு அறிமுகப்படுத்த இருக்கின்றது.
இந்த புதிய சோதனைத்திட்டம் விரைவில் நடைமுறையில் வரவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது, கொட்டாவ மற்றும் கடவத்தை நெடுஞ்சாலை சந்திப்புகளில் இந்த முறை முதலில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் பயணிகள் டெபிட் அட்டைகள், கிரெடிட் அட்டைகள் மற்றும் QR ஸ்கேன் முறைகள் மூலமாக கட்டணங்களை செலுத்தமுடியும்.
மே மாதத்திலிருந்து அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இந்த அட்டைப்பணம் செலுத்தும்முறை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.