வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பில் சோதனைகள் தீவிரம் – பிள்ளையானின் சகாக்கள் விசாரணைக்கு அழைப்பு!


tamil news:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைதுசெய்யப்பட்டதையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் பல பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்ற இறுதி அமர்வின்போது பிள்ளையான் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,

அவருடன் பணியாற்றிய ஒருவர் நேரில் வந்து ஒத்துழைப்பை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.


பிள்ளையான் கைதுசெய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்புலனாய்வுதுறை அதிகாரிகள் (CID) தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் பிள்ளையான் என்பவருடன் மிகநெருங்கிய தொடர்புகொண்ட வாழைச்சேனை சேர்ந்த ஒருவர்,

அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


தற்போதைய விசாரணைகளின் போக்கை காணும்போது பிள்ளையான் தொடர்பில் உள்ள நெருங்கியவர்கள் விசாரணைக்குள் வரக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.