வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கொழும்பு உள்ளிட்ட பல உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களுக்கு இடைக்காலத் தடையுத்தரவு!


tamil news:

கொழும்பு மாநகர சபை மட்டுமல்லாமல், பல உள்ளூராட்சி அமைப்புகளின் எதிர்வரும் தேர்தல்களை தொடர்புடைய நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றையதினம்(07.04.2025) இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


இந்தத் தடை உத்தரவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றம், மே 5ம் திகதிக்கு முன் எதிர்ப்புகள் தாக்கல் செய்யவேண்டும் என்றும்,

மே 7ம் திகதிக்குள் மனுதாரர்களால் மேலதிக ஆட்சேபனைகள் எழுப்பப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதனடிப்படையில் மனுக்களுக்கான மேலதிக விசாரணை மே 16ம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேன்முறையீட்டு விசாரணை முடிவுக்கு வரும் வரை,

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என்றும் அந்த உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக வேட்புமனுக்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்த தேர்தல் அதிகாரிகளின் முடிவுகள் சட்டப்பூர்வமற்றவை எனக் கூறி,

பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.