தொடர்ச்சியான மழையால் டெங்கு, சிக்குன்குனியா அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
tamil news:
இலங்கையில் பெய்து கொண்டிருக்கும் தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொடூர நோய்கள் பரவலாமென சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட இதுகுறித்து தெரிவித்ததாவது,
"ஒரேவகை நுளம்புகள் மூலமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா இரண்டும் பரவும் என்பதால் இந்நோய்கள் பரவும் அபாயம் தற்போது மிக அதிகமாக உள்ளது,"
என கூறினார்.
பாடசாலை விடுமுறை மற்றும் நீண்ட வாரஇறுதி விடுமுறை காரணமாக மக்கள் பலர் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக வீடுகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையே நுளம்புகள் பெருக நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுளம்பு பெருக்கம் காரணமாக இந்நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால்,
பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியான சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மூலமாகத்தான் நம்மால் இந்த நோய்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.