வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வவு. நீண்டகாலமாக பெண்களின் சங்கிலிகளை பறித்த இராணுவ உறுப்பினர் கைது!


tamil news:

வவுனியாவில் வீதியோரங்களில் நடந்துசெல்லும் பெண்களை குறிவைத்து அவர்களின் தங்க சங்கிலிகளை பறித்து வந்த ஒரு இராணுவ உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


வவுனியா மாவட்ட காவற்துறையின் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்றையதினம்(10.04.2025) ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் 30 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.


அவர் வவுனியாவைச் சேர்ந்தவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி ஓமந்தை பகுதியில் ஒரு பெண்ணிடமிருந்து 1 பவுண் தங்க சங்கிலி,

2024ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வேப்பங்குளம் பகுதியில் 2 பவுண்,

மார்ச் 31ம் திகதி கூமாங்குளம் பகுதியில் 1 பவுண் மேலும் இந்த மாதம் 1ம் திகதி நெளுக்குளம் மற்றும் இராசேந்திரகுளம் பகுதிகளில் ஒவ்வொன்றாக 1 பவுண் வீதம் சங்கிலிகள் பறிக்கப்பட்டிருந்தனவென தெரியவந்துள்ளது.


சம்பவங்களுக்கு அவர் தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியநிலையில்,

அந்த வாகனமும் தற்போது காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலும் அவரால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் சங்கிலிகள் சில பத்திரமாக பதுக்கப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.


தற்போது மேலதிக விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.