மட்டக்களப்பில் நிதி மோசடி சர்ச்சை: சாணக்கியன் மீது கடும் குற்றச்சாட்டு!
tamil news:
இலங்கையில் கடந்த சில தினங்களாக முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன.
இதன் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்படுவதுடன்,
அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பாக ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் நெருங்கியர்களுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார் அவர்களால் பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பட்டிருப்பு தொகுதியிலுள்ள ஏறிவில் கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரிய அளவிலான மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சாணக்கியனின் நெருக்கமான ஆதரவாளர்கள் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நேரடியாக பதிலளிக்குமாறும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.