யாழில் மதுவரி அதிகாரிகளால் சீவல் தொழிலாளி தாக்கப்பட்டார்!!!
tamil news:
யாழ்ப்பாணம், வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்துடன் சேர்ந்த அதிகாரிகள் சிலர் தன்னை தாக்கியதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதாவது,
சம்பந்தப்பட்ட நபர் சீவல் தொழிலாளி எனத் தெரிவிக்கப்படுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் இன்றையதினம்(07.04.2025) ஊடகங்களுக்கு தெரிவித்தபோது கூறியதாவது,
"ஏப்ரல் 4ம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக நான் என் பகுதிக்கு சென்றிருந்தேன்.
அப்போது சிவில் உடையில் வந்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் 'நேரம் கடந்துவிட்டது' எனக் கூறி முற்றிலும் தவறான முறையில் என்னை மிரட்டினார்கள்.
பிறகு 5.40 மணியளவில்,
அவர்கள் என்னை தடுத்து வைத்து வழக்குப் பதிவுசெய்யும் வகையில் கையொப்பம் வைக்கச் சொன்னார்கள்.
பின்னர்
‘மதுபானசாலைக்கு செல், அங்கு அதிகாரிகள் இருப்பார்கள்’
என கூறி என்னை அழைத்துசென்றனர்.
அங்கு சென்றவுடன் அவர்கள் எட்டு பேர் சேர்ந்து என் முகம், வயிறு மற்றும் கால்களில் கடுமையாக தாக்கினர்.
‘ஏன் அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது வாயில் மோசமாக அடிக்கப்பட்டேன்.
என்னை தாக்கியவர்களில் ஒருவர் எமது பகுதியில் வசிக்கும் ஒருவர் தந்த தடியை பயன்படுத்தி தாக்கியதையும் கண்டேன்.
இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகவே தெரிகின்றது.
அப்பொழுது அயலவர்கள் சிலர் வந்து என்னை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உடல்நலம் சரியில்லாமல், மருதங்கேணி வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டேன்.
வெளியே கூறவேண்டாம் என எச்சரிக்கையும்,
கூறினால் மீண்டும் தாக்கப்படும் என மிரட்டலும் வந்துள்ளது.
எனவே, யாழ் காவற்துறை நிலையத்தில் நான் முறையான முறைப்பாடும் செய்துள்ளேன்.
எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு எனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்"
எனக் கூறினார்.