கொழும்பில் அடையாளங் காணப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட சஹ்ரான் குடும்பத்தினர்!!!
tamil news:
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு தலைமையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் குடும்ப உறுப்பினர்கள் நேற்றையதினம்(18.04.2025) மாலைநேரம் கொழும்பில் காவற்துறையின் கண்காணிப்பில் சிக்கியுள்ளனர்.
சிறப்பு புனிதநாளான பெரிய வெள்ளிக்கிழமை அன்று சஹ்ரானின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்தமுறை தாக்குதல் நடைபெற்ற காலிமுகத்திடல் பகுதியில் கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றுலா பயணம் தொடர்பாக குருநாகல் மாவட்டத்திலுள்ள கட்டுப்பொத்தை காவற்துறை நிலையத்தினரால் சஹ்ரானின் குடும்பம் எந்தவொரு சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு, அனைத்து காவற்துறை நிலையங்களுக்கும் இரகசிய அறிவுறுத்தல்அனுப்பப்பட்டடுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த பேரூந்து கொழும்பு பொரளைப் பகுதியில் காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் சஹ்ரானின் உறவினர் குழு தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விசாரணையின்போது அவர்கள் கொழும்பிற்கு குடும்ப சுற்றுலா ஒன்றுக்காக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
நீண்டநேர விசாரணை முடிவில், தேவையான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.