வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நாயக்கர்சேனை கிராமத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் - நாவுக்கரசர் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா


Event:

புத்தளம், கற்பிட்டி நாயக்கர்சேனை அரசினர் இந்து தமிழ் மகாவித்தியாலயத்தில்(நாவுக்கரசர் வித்தியாலயம்), அனைத்துலக மருத்துவ நல அமைப்பான ஐ.எம்.எச்.ஓ.(IMHO) நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி புதிய கட்டிடம் கடந்த வியாழக்கிழமை(10.04.2025) மிகச் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் திரு. வி. ராமநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

கல்வி, சமூக மற்றும் மருத்துவத் துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.


"விழாவின் முக்கிய தருணங்களில் ஒன்றாக,

நாயக்கர்சேனை சமூகத்திற்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க நாளாக அமைந்ததாகவும்,

பாடசாலையின் வளர்ச்சிக்கான புதிய படிக்கட்டாக இந்த கட்டிடம் அமையும்."

என பாடசால் அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.


1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக 2024 செப்டம்பர் 30 அன்று புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


விழாவின் பிரதம அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்தி பிரதி பணிப்பாளர் திரு. எம்.ஏ.எம் அனீஸ் பங்கேற்றார்.


அவருடன் திட்டமிடல் பிரிவின் பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி என்.எம்.ஆர். தீப்தி பெர்ணான்டோ,

IMHO அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர் வைத்தியர் எஸ். தேவேந்திரன்,

IMHO தலைவர் திருமதி ராஜம் தேவேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


மேலும் கல்வித்துறையினரான மாகாண மற்றும் வலயமட்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற கல்வியாளர் திரு. வி. நடராசா, முன்னாள் அதிபர் திருமதி லில்லி ஜெயசீலன், பாடசாலையின் அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கத்தினருடன் நாவுக்கரசர் வித்தியாலயத்தின் நிறுவுபவரின் குடும்ப உறுப்பினர்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் நிகழ்வின் போது IMHO தலைவர் மற்றும் ஆலோசனை உறுப்பினர்களுக்கு நாயக்கர்சேனை பிரதேசமக்கள் மற்றும் பாடசாலை சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வு கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு புதிய திசை தெரிவாகவும்,

மாணவர்கள் எதிர்கால கல்வி பயணத்திற்கு உறுதியான அடித்தளமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.