ரவிராஜ் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்; பிள்ளையான் பெயர் மின்னல் போல ஒலிக்கிறது!
tamil news:
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுத்தும் வகையில் சில விடயங்கள் வெளிவந்துள்ளன.
பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரட்நாயக்க அளித்த ஒரு நேர்காணலில்,
ரவிராஜ் கொலை தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது சந்தேகத்தின் கண்கள் திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற ரவிராஜ் படுகொலை, அவரால் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படவிருந்த சில முக்கியமான தகவல்களுடன் தொடர்புடையதாக அவர் கூறினார்.
அந்த போர்க்காலத்தின்போது சில தமிழ்த் தொழிலதிபர்களிடமிருந்து கடற்படை மற்றும் இராணுவத்துடன் இணைந்த சில கும்பல்கள் கட்டாயமாக கப்பம் வசூலித்த சம்பவங்களும் அடங்கியிருந்தன.
இவை தொடர்பாக நடராஜா ரவிராஜ் ஆவணங்கள் திரட்டி வந்ததாகவும் அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட இருந்த நேரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரட்நாயக்க கூறியுள்ளார்.
மேலும் ரவிராஜ் கொலைக்கு ஒரு வாரத்திற்கு முன் அவர் தனது உயிருக்கு அபாயம் இருப்பதை கூறியதாகவும்,
தனது நண்பர் பயிலுனர் சட்டத்தரணியான சதுரிகா ரணவக்கவிடம் இதை பகிர்ந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரவிராஜ் உடல் வைக்கப்பட்ட மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் சம்பவம் குறித்த பல்வேறு விபரங்களை "கீர்த்தி ரட்நாயக்க" என்ற பெயரில் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இலங்கையின் ஒரு முன்னணி ஊடகம் அவ்வப்போது புதிய தகவல்களை சேகரித்துவருவதாகவும் அறியப்படுகின்றது.
மேலும் ரட்நாயக்க அளித்துள்ள குற்றச்சாட்டுகளில்,
பிள்ளையான் சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் தொடர்புடையவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது மேலும் விசாரணையை தீவிரமாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.