பிள்ளையான் கைதுசெய்யப்பட்டதற்கான பின்னணி குறித்து காவற்துறை விளக்கம்!!!
tamil news:
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமி முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்றையதினம்(08.04.2025) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இக்கைது தொடர்பான காரணங்களை காவற்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அதாவது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் அவரை காணமலாக்கப்பட்டமை குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம்(CID) முன்னெடுத்து வருகின்றது.
இது சம்பந்தமாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாராம்.
ஆனால் நேற்றையதினம்(09.04.2025) சமூக வலைத்தளங்களில் பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதை அதிகாரப்பூர்வமாக காவற்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில பிள்ளையான் கைதுசெய்ததையடுத்து மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பகுதியிலுள்ள சில இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும்,
இது களுவாஞ்சிகுடி காவற்துறை நிலையத்திற்கு அருகில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.