ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளயானுக்கு தொடர்பு உறுதி!!! வெளியானது உத்தியோகபூர்வ தகவல்
tamil news:
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதலுடன், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தொடர்புடையவர் என கொழும்பு பேராயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேராயர் அலுவலகத்தின் தகவல் பரப்பல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூன் கிறிசாந்த, இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
தாக்குதலில் பிள்ளயானுக்கு பங்கேற்பு இருப்பதாக அவர் உறுதியாக நம்புவதாகவும்,
இதுதொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் சிறிதளவில் திருப்தியளிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் விசாரணைகள் இன்னும் விரைவாகவும், விரிவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிள்ளையானுடன் நெருங்கிய சகாவாக இருந்ததாகக் கூறப்படும் அசாத் மௌலானவை நாட்டுக்கு அழைத்துவந்து விசாரணை செய்யப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அசாத் மௌலான பிரித்தானிய ஊடகமான சேனல் 4 இற்கு வழங்கிய பேட்டியில்,
இத்தாக்குதலைப் பற்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருந்ததாகவும்,
அவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அருட்தந்தை ஜூன் கிறிசாந்த கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் மூலம் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த நபர்கள் குறித்து வெளிச்சம் பெறமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.