வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

காசாவில் இஸ்ரேல் தீவிரம்: பலஸ்தீனியர்கள் தண்ணீரின்றி தவிப்பு!!!


tamil news:

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் பின்னணியில் காசா பகுதியில் நீருக்கான கடும் பஞ்சம் உருவாகியுள்ளது.


முக்கியமாக நீர் வழங்கல் அமைப்புகள் சிதைக்கப்பட்டதால் பலஸ்தீன மக்கள் தேவையான குடிநீருக்காக சிரமப்படுகின்றனர்.


தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை முற்றுகையிடும் நடவடிக்கையை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டுள்ளது.


இது பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.


மேலும் காசாவின் வடக்கு பகுதிகளில் சில இடங்களை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த இராணுவ நடவடிக்கைகள் மேலும் விரிவடையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அங்கு இஸ்ரேலிய படைகள் நிலைத்திருக்கும் சூழ்நிலையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கருதப்படுகின்றது.