ரவீந்திரநாத் கடத்தப்பட்டதற்கு முன்பு சென்ற இராணுவ வாகனம்!!! வெளியான புதிய தகவல்
tamil news:
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை 90 நாட்கள் வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம், கலைப்பீட பீடாதிபதி கலாநிதி பாலசுகுமாரின் பதவிவிலகலை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்றதாக நம்பப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ரவீந்திரநாத் கடத்தப்படுவதற்கு பின்னால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்ட இரகசிய பாதுகாப்புப்பிரிவு தொடர்புடையது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ரவீந்திரநாத் கடத்தப்படுவதற்கு முன்னர் வெலிக்கந்தையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றதாகக் கூறப்படும் இராணுவ வாகனம் குறித்து சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இது சம்பவத்திற்குப் பின்னணி விளக்கங்களை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.