EPDP இன் குற்றச்சாட்டு பட்டியலை வெளிக்கொணர்ந்த இளைஞர்!
tamil news:
இன்றையதினம்(06.04.2025) யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உள்ளூராட்சிசபை தேர்தலில் போட்டியிடும் இளைஞர் ஒருவர்,
“ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன்(EPDP) தொடர்புடைய சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்தும், இதுவரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.”
என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"EPDP-யில் முக்கிய பதவிகளில் இருந்த மதனராஜன், நெப்போலியன், சேதுபதி மற்றும் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பேரும் நீதிமன்றத்தில் எதிர்நோக்கிய வழக்குகளில் நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் மரணதண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்பட்டிருந்தபோதிலும்,
தண்டனை பெறவில்லை.
சிலர் தப்பி ஓடி நாடை விட்டு சென்றுள்ளனர்.
2018ஆம் ஆண்டு, யாழ் நீதிமன்றம், வெளிநாட்டில் பதுங்கியவர்களை நாட்டுக்கு அழைத்துவருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டது.
ஆனால் அதன்பின் மூன்று அரச தலைவர் பதவிமாற்றம் நிகழ்ந்தும், அவர்களை கைது செய்யமுடியாத நிலை இன்னும் தொடர்கின்றது,"
என்றார்.