இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!! IMF அதிர்ச்சித்தகவல்
tamil news:
இலங்கை பொருளாதாரத்திற்கு முன்னிலையில் உள்ள சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை தெரிவித்துள்ளது.
அதாவது இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்தவரை சமீபத்திய உலகளாவிய மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்பாராத சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் உள்ளதாலும்,
இந்த மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நேரத்தில் உலகளாவிய தாக்கங்களை மதிப்பீடு செய்வதும்,
அவற்றால் இலங்கை மீது ஏற்படும் எதிர்விளைவுகளை குறைக்கும் வழிகளை வகுப்பதும் மிகவும் அவசியமாக இருப்பதாகவும்,
இது கால அவகாசம் தேவைப்படும் பணியாகும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த கருத்துகள் அந்த அமைப்பின் மூத்த தூதரான இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான குழுவின் சமீபத்திய இலங்கை விஜயத்தை அடுத்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும் IMF ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இந்நிலையில் முக்கியமான முடிவுகளை ஏற்படுத்திவருவதாகவும், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் வளர்ச்சி வீதம் 5% வரை உயரக்கூடிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.